திருவடி ஆசிரமம்

கைவல்ய நவநீதம் | தத்துவ விளக்கப் படலம் | பாடல் 41

கைவல்ய நவநீதம்

தத்துவ விளக்கப் படலம் | பாடல் 41

"தூடண தமத்தில் வந்த, தோற்றமாம் சத்தி செய்யும்,
ஏடணை விகாரம் சொன்னீர்! இரண்டு சத்திகள் என்றீரே;
மூடலாம் சத்தி செய்யும் மோகமும் சொல்லும் ஐயா!
கேடு அறக் குருவே! என்ன, கிருபையோடு அருள் செய்வாரே."

#The_Inquiry: சீடனின் வினா

"குற்றமுள்ள தமோ குணத்திலிருந்து தோன்றிய விக்ஷேப சக்தி (தோற்றச் சக்தி) செய்யும் விகாரங்களை விளக்கினீர்கள். மாயைக்கு இரண்டு சக்திகள் உண்டென்று கூறினீர்களே! இப்போது, உண்மையை மறைக்கும் அந்த ஆவரண சக்தி (மூடலாம் சக்தி) செய்யும் மயக்கங்களைப் பற்றியும் எனக்கு விளக்குங்கள் குருவே!" என்று சீடன் வேண்டுகிறான்.

ஞானத் தெளிவு: உங்கள் தேர்வு?

உலகாகத் தோன்றும் 'விக்ஷேப சக்தி'
உண்மையை மறைக்கும் 'ஆவரண சக்தி'

திருவடி ஆசிரமம் இலங்கை

By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி

கருத்துகள்