கைவல்ய நவநீதம் | தத்துவ விளக்கப் படலம் | பாடல் 42 | ஆவரண சக்தி
கைவல்ய நவநீதம்
தத்துவ விளக்கப் படலம் | பாடல் 42
"தான் நிகர் தனக்காம் ஈசன் தனையும், தங்களைத் தாம் கண்ட ஞானிகள் தமையும் அன்றி;
நாஸ்தி, நபாதி என்னும் ஊன் இடை உயிர்கள் உள்ளத்து, உணர்விழி குருடாம் வண்ணம்;
வான், நிலம், திசைகள் மூடும்; மழை நிசி இருள் போல் மூடும்."
#Darkness: மழைக்கால இருள்...
தனக்கு நிகர் இல்லாத ஈசனையும், தன்னைத் தான் அறிந்த ஞானிகளையும் தவிர, மற்ற எல்லா உயிர்களின் அறிவையும் இந்த ஆவரண சக்தி (மூடலாம் சக்தி) மறைத்துவிடுகிறது. வான், நிலம், திசைகள் அனைத்தையும் மழைக்காலத்து நள்ளிரவு இருள் எப்படி மூடி மறைக்குமோ, அப்படியே இவ்வுயிர்களின் அகக்கண்ணைக் குருடாக்கி, "ஆத்மா இல்லை (நாஸ்தி), அது விளங்கவில்லை (நபாதி)" என்று சொல்ல வைக்கும்.
உங்களை ஆவரண சக்தி மறைக்கிறதா?
✅ பதிவு செய்யப்பட்டது. நன்றி!
திருவடி ஆசிரமம் இலங்கை
By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி



கருத்துகள்
கருத்துரையிடுக