திருவடி ஆசிரமம்

அறிவியலும் ஆன்மீகமும்: உலகம் ஒரு தோற்றமா? அனுபவப் பாடங்கள்

அறிவியலும் ஆன்மீகமும்

உலகம் ஒரு தோற்றம் | அனுபவப் பகிர்வு

"பொருட்கள் என்பவை வெறும் ஆற்றலின் அதிர்வுகளே என்கிறது அறிவியல்.
காண்பவை எல்லாம் காண்பானின் மனோவிருத்தியே என்கிறது ஆன்மீகம்.
இரண்டும் சந்திக்கும் புள்ளி: தோற்றம் மட்டுமே உண்மை அல்ல."

#The_Experience: எப்படி அனுபவமாக்குவது?

அறிவியல் ரீதியாக ஒரு கல்லை ஆராய்ந்தால், அது அணுக்களால் ஆனது, அந்த அணுக்கள் வெறும் வெற்றிடமும் ஆற்றலுமே. ஆன்மீக ரீதியாக, நீங்கள் ஒரு கனவு காணும்போது அது உண்மையாகத் தோன்றி, விழித்தவுடன் மறைவது போல, இந்த ஜாக்கிரத அவஸ்தையும் (விழிப்பு நிலை) ஒரு நீண்ட கனவே.

பயிற்சி: ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதன் பெயரைத் தவிர்த்து, அது உங்கள் புலன்களுக்குத் தரும் ஒரு 'தகவலாக' மட்டும் பாருங்கள். "நான் பார்க்கிறேன், அதனால் இது இருக்கிறது" என்ற எண்ணத்தை மாற்றி, "என் இருப்பில்தான் இது தோன்றுகிறது" என்று உணர்வதே அனுபவ ஞானம்.

உங்கள் அனுபவம் என்ன சொல்கிறது?

உலகம் நிஜம் என்றே என் புலன்கள் சொல்கின்றன
ஆம், இது ஒரு மாயத் தோற்றம் எனப் புரிகிறது

திருவடி ஆசிரமம் இலங்கை

By சுவாமி
கைவல்யாநந்த
சரஸ்வதி

கருத்துகள்